Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தி ஒயிட் லோட்டஸ் தொடரின் நான்காவது சீசனில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பது உறுதி

by Admin

சினிமா
தி ஒயிட் லோட்டஸ் தொடரின் நான்காவது சீசனில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பது உறுதி

எச்.பி.ஓ நிறுவனத்தின் புகழ்பெற்ற தி ஒயிட் லோட்டஸ் தொடரின் நான்காவது சீசனில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தாலஜிபாணியில் உருவாகும் இத்தொடரின் 4-வது சீசன் பிரான்ஸ் நாட்டில் படமாக்கப்பட உள்ளது.முன்னதாக இத்தொடரின் 3-வது சீசனில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தனது கர்ப்பகாலம் மற்றும் குழந்தை வளர்ப்பு காரணமாக அந்த வாய்ப்பை அவர் தவிர்த்தார்.இந்த சீசனில் தீபிகாவுடன் இணைந்து ஹெலினா போன்ஹாம் கார்ட்டர், ஸ்டீவ் கூகன், கிரிஸ் மெசினா உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.இதன் படப்பிடிப்பு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடர் 2026 இறுதி அல்லது 2027-ல் வெளியாக வாய்ப்புள்ளது. ஹாலிவுட் திரையுலகில் தீபிகா படுகோனேவின் வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான 'ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்' கௌரவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய நடிகை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share via
Advertiment
Ads