Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குளிர்கால  ஒலிம்பிக் போட்டி-2026,மிலனோ கார்டினா   தங்கம்

by Admin

விளையாட்டு
குளிர்கால  ஒலிம்பிக் போட்டி-2026,மிலனோ கார்டினா    தங்கம்

 குளிர்கால  ஒலிம்பிக் போட்டி-2026 , மிலனோ கார்டினா   தென் கொரியாவின்  சோய் கா- ஆன் மகளிர் ஸ்னோபோர்டு  ஹாஃப்பைப்பில் தங்கம் வென்று  வரலாற்று சாதனை படைத்தார்.  17 வயதான இவர், இரண்டு முறை  ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் குளோய் கிம்மை வீழ்த்தி இப்பதக்கத்தை வென்றார். ஸ்னோ ஸ்போர்ட்ஸ் பிரிவில் தென் கொரியாவிற்கு தங்கம் பெற்றுத் தந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை  சோய் கா-ஆன்  பெற்றார். தனது முதல் சுற்றில் பலத்த காயமடைந்து கீழே விழுந்த போதிலும், கடைசி சுற்றில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு 90.25 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகத் தங்கம் வெல்ல முயன்ற குளோய் கிம், 88.00 புள்ளிகளுடன்  வெள்ளிப் பதக்கம் வென்றார்.ஜப்பானின் மிட்சுகி ஓனோ வெண்கலப் பதக்கத்தை வென்றார். சோய் கா-ஆன், குளோய் கிம்மைத் தனது முன்மாதிரியாகக் கருதுபவர் என்பதும், கிம் அவருக்குப் பயிற்சியின் போது வழிகாட்டியாகஇருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads