Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பாராலிம்பிக் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்றார் பிரவீண் குமார்

by Editor

விளையாட்டு
பாராலிம்பிக் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்றார் பிரவீண் குமார்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீண் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆடவா் உயரம் தாண்டுதல்-டி64 இறுதிச்சுற்று போட்டியில், பிரிட்டன் வீரர் ஜானதன் ப்ரூம்-எட்வர்ட்ஸை எதிர்கொண்ட 18 வயதான இந்திய வீரர் பிரவீண் குமார், தனது முதல் பாராலிம்பிக்கில் போட்டியில் 2.07 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று புதிய ஆசிய சாதனை படைத்தார்.இந்திய தடகள வீரர் பிரவீண் தனது முதல் முயற்சியிலேயே 1.88 மீட்டரும், அடுத்தடுத்த முயற்சிகளில் 1.93 மீட்டர், 2.01 மீட்டர் தாண்டி மூன்றாவது இடத்தை பிடித்தார். அடுத்தடுத்த முயற்சிகளில் 2.01 மீட்டர், 2.04 மீட்டர் தாண்டி, விடாமுயற்சியில் சவாரி செய்து 2.07 மீட்டர் தாண்டி ஆசிய சாதனையை படைத்தார்.

Share via
Advertiment
Ads