Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியாவுக்கு எதிராக போட்டியை தங்கள் அணி புறக்கணிக்கும் -பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் செரிப்

by Admin

விளையாட்டு
இந்தியாவுக்கு எதிராக போட்டியை தங்கள் அணி புறக்கணிக்கும் -பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் செரிப்

உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்ட லீக் போட்டியை தங்கள் அணி புறக்கணிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் செரிப் அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தார். இந்தியாவுக்கு பயணம் செய்ய மறுத்ததால் தொடரில் இருந்து நீக்கப்பட்ட வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் விளையாட்டு மைதானத்தில் அரசியல் இருக்கக் கூடாது என்றும் இது மிகவும் கவனமாக ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு வேண்டும் அவர் தனது முடிவு குறித்து விளக்கம் அளித்தார் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பை தொடரில் பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையின் கொழும்பில் இந்தியா பாகிஸ்தான் மோதவிருந்தது இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணித்தாலும் பாகிஸ்தான் அணி இந்த தொடரில் மற்ற போட்டிகளில் விளையாடும் என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ஒரு போட்டியை மட்டும் புறக்கணிப்பது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் நிதி இழப்பு மற்றும் தடையை சந்திக்க நேரிடும் என்றும் ஐசிசி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Share via
Advertiment
Ads