Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியகிரிக்கெட் அணி -பாகிஸ்தான் கிரிக்கெட்அணியோடு உலகக் கோப்பை டி20 ,2026 ஐசிசி ஆண்கள் தொடரில்ஆடுமா...

by Admin

விளையாட்டு
இந்தியகிரிக்கெட் அணி -பாகிஸ்தான் கிரிக்கெட்அணியோடு உலகக் கோப்பை டி20 ,2026 ஐசிசி ஆண்கள் தொடரில்ஆடுமா...

உலகக் கோப்பை டி20 ,2026 ஐசிசி ஆண்கள் தொடரில் பாகிஸ்தான் அணியின் பங்கேற்ப குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிற்கு தனது அணியை அனுப்புவதற்கு முன்பு பாகிஸ்தான் அரசாங்கத்தின் முறையான அனுமதி மற்றும் பாதுகாப்பு உத்தரவாதத்திற்காக காத்திருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதட்டங்கள் காரணமாக விளையாட்டை தொடர்களில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் அரசியலும் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுக்கும் பட்சத்தில் அதற்கு பதிலடியாக இந்தியாவிற்கு செல்லாமல் போக்குகளை புறக்கணிக்கலாமா என்பது குறித்தும் பாகிஸ்தான் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது ஒருவேளை பாதுகாப்பு காரணங்களால் சிக்கல் நீடித்தால் பாகிஸ்தான் தனது போட்டிகளை மட்டும் வேறு ஒரு நாட்டில் விளையாடுவதற்கான கோரிக்கையும் முன்வைக்கும் இதை ஐசிசி பரிசளிக்க வாய்ப்பு உள்ளது.

ஐசிசி டி20 தரவரிசையின் அடிப்படையில் (7-வது இடம்) பாகிஸ்தான் அணி இந்தத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.
 இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஜனவரி 25, 2026 அன்று அறிவித்தது.சல்மான் அலி ஆகா.-கேப்டன்பாபர் அசாம், ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஷதாப் கான் மற்றும் பக்கர் ஜமான் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.முகமது ரிஸ்வான் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.
பாகிஸ்தான் அணி குழு 'ஏ' பிரிவில் இந்தியா, அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
பிப்ரவரி 7: நெதர்லாந்துக்கு எதிரான முதல் போட்டி.
பிப்ரவரி 10: அமெரிக்காவுக்கு எதிரான போட்டி.
பிப்ரவரி 15: இந்தியாவுக்கு எதிரான முக்கியமான ஆட்டம் கொழும்பில் நடைபெற உள்ளது.
பிப்ரவரி 18: நமீபியாவுக்கு எதிரான போட்டி.
 பாதுகாப்பு காரணங்களால், பாகிஸ்தான் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளும் இலங்கையிலேயே நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவை பிப்ரவரி 2-ஆம் தேதிக்குள் எடுப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோக்சின் நக்வி தெரிவித்துள்ளார். எனினும், ஏற்கெனவே அணி அறிவிக்கப்பட்டுத் தயாராக உள்ளது. 

Share via
Advertiment
Ads