Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வடிவேலுவுக்கு விஷால் பாராட்டு

by Editor

சினிமா
வடிவேலுவுக்கு விஷால்  பாராட்டு

நடிகர் விஷாலின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் அவர் நடித்து வரும் 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷாலிடம், தயாரிப்பாளர் சங்கம் சிம்பு மற்றும் வடிவேலு மீதான தடையை நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலில் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என பதிலளித்தார்.வடிவேலு குறித்து மீண்டும் செய்தியாளர்கள் அழுத்திக் கேட்டபோது, ''ஒரு ரசிகனாக நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன். கடினமான சூழ்நிலைகள் மற்றும் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகு கவுண்டமணி மற்றும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளைத் தான் முதலில் பார்ப்பேன்.வடிவேலு மக்களைத் தனது நகைச்சுவையால் மகிழ்வித்து வருகிறார். அது சாதாரண காரியம் இல்லை. நீண்ட இடைவேளை ஆகிவிட்டது. பரவாயில்லை. அவர் நிறைய படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்'' என்றார்.

Share via
Advertiment
Ads