Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வெள்ளி பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு தலைவர்கள் வாழ்த்து....

by Newsdesk

விளையாட்டு
வெள்ளி பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு தலைவர்கள் வாழ்த்து....



பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில், வெள்ளி பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில், இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற பவினா பட்டேல், சீனா வீராங்கனையுடன் தோல்வியுற்று, இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கத்தை பெற்று தந்துள்ளார். இவரை வாழ்த்தி டிவிட்டரில் பதிவிட்டிருந்த ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த்,  பவினாவின் அசாத்திய திறமையும், உறுதியும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக புகழ்ந்துள்ளார். இதேபோல்  மோடியும், பவினா பட்டேல், சரித்திரம் படைத்துள்ளதாக பாராட்டியுள்ளார்.
 
இவரது வாழ்க்கை பயணம் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாகவும்,  மேலும் பல இளைஞர்களை விளையாட்டு நோக்கி ஈர்ப்பதற்கு உந்துதலாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share via
Advertiment
Ads