Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்.

by Editor

ஆன்மீகம்
கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்.

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர்.

தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு தம்பிராட்டி அம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி வீதிஉலா, மாவிளக்கு ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இன்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய திருத்தேரோட்டம் காலை 6:30 மணிக்கு நிலையம் அடைந்தது. தேரோட்ட விழாவில் தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேலும், தேரோட்டத்தை முன்னிட்டு தொடர்ந்து 14 வருடங்களாக திருத்தேர் அனைத்து சமுதாய அன்னதானக்குழு சார்பில் வெண்பொங்கல், வடை, கேசரி  சிறப்பான அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

விழாவின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வாரிய ஊழியர்கள் மின் வயர்களை அகற்றினர். மேலும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Share via
Advertiment

More Stories

Ads