Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நண்பனின் கோடிக்கணக்கான கடனை ஏற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன்

by Editor

சினிமா
நண்பனின் கோடிக்கணக்கான கடனை ஏற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பனின் கோடிக்கணக்கான கடனை அவரே ஏற்றுக் கொண்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்ப கட்டத்தில் தனது நண்பரின் தயாரிப்பிலேயே நடித்து வந்தார்.

ஆனால் அவரது இரண்டு படங்கள் தோல்வியை தழுவியதால் அந்த நண்பருக்கு 84 கோடி ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சிவகார்த்திகேயன் மற்ற நடிகர்களைப் போல அவரை விட்டு நகர்ந்து கொள்ளாமல் தன்னை வைத்து படம் எடுத்தவர் அது மட்டுமின்றி தன் நண்பர் என்பதால் அவரது முழு கடனையும் தானே ஏற்றுக் கொள்ள சம்மதித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Share via
Advertiment
Ads