Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிம்புவின் வளர்ச்சியை பொறுக்காமல் சதி -உஷா ராஜேந்தர்

by Editor

சினிமா
 சிம்புவின் வளர்ச்சியை பொறுக்காமல் சதி -உஷா ராஜேந்தர்

நடிகர் சிம்புவின் வளர்ச்சியை பொறுக்காமல் சிலர் சதி செய்வதாக அவரது தாயார் உஷா ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.நடிகர் சிம்பு அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தினை முழுமையாக நடித்துக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு விதித்துள்ளது.இது குறித்து சிம்பு தரப்பில் அவரது தாயார் உஷா ராஜேந்தர், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உஷா ராஜேந்தர், நடிகர் சிம்புவின் வளர்ச்சியை பொறுக்காமல் சிலர் சதி செய்வதாக அவரது தாயார் குற்றம்சாட்டினார்.மேலும் சிம்பு – மைக்கேல் ராயப்பன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடாது எனவும், திட்டமிட்டபடி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறினார்.

 

Share via
Advertiment
Ads