Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தீபாவளிக்கு வெளியாகிறது பீஸ்ட் முதல் பாடல் 

by Editor

சினிமா
தீபாவளிக்கு வெளியாகிறது பீஸ்ட் முதல் பாடல் 

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.


விஜய்க்கு வில்லனாக செல்வராகவன் நடிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் அப்டேட் ஒன்றுக்காக விஜய் ரசிகர்கள் தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.


அந்தவகையில் பீஸ்ட் திரைப்படத்தின் ஒரு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. வெளியான அந்த தகவலின் படி, பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடலை வருகிற தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்களுக்கு அனிருத் இசை அமைத்து விட்ட காரணத்தினால், வரும் தீபாவளி அன்று விஜய்யின் அறிமுகப் பாடல் வெளியிட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது

Share via
Advertiment
Ads