Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டி20 உலகக் கோப்பை: முழு விவரம்

by Editor

விளையாட்டு
டி20 உலகக் கோப்பை: முழு விவரம்



ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ள ஏழாவது டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன.


போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் நடைபெறுகின்றன. இந்த போட்டிகள் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளன. துபாயில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.
முதல் அரையிறுதி போட்டி அபுதாபியில் நவம்பர் 10ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதி போட்டி துபாயில் 11ஆம் தேதியும் நடக்கிறது, இறுதிப் போட்டி நவம்பர் 14ஆம் தேதி துபாயில் நடக்கிறது.குரூப்-2 பிரிவி்ல் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் ஆட்டத்திலேயே மோதுகின்றன. அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி இரண்டாவது போட்டியில் அக்டோபர் 31ஆம் தேதி நியூஸிலாந்துடன் மோதுகிறது இது துபாயில் நடக்கிறது.நவம்பர் 3ஆம் தேதி அபுதாபியில் நடக்கும் மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.நவம்பர் 5ஆம் தேதி பி பிரிவில் முதலிடம் பெற்ற அணியுடனும், நவம்பர் 8ஆம் தேதி ஏ பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற அணியுடனும் மோதுகிறது.நவம்பர் 8ஆம் இந்தியா ஏ பிரிவில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணியுடன் மோதுகிறது.


இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன. மேலும் நான்கு அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும்.இந்தத் தகுதி சுற்றில் வங்காளதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் மற்றும் பப்புவா நியூகினியா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. தகுதி சுற்றுப்போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை 20 ஓவர் போட்டியில் விளையாட தகுதி பெறும்.


முதலில் இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் 1: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் 2: இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ளன.

Share via
Advertiment
Ads