Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சின்னத்திரை பிரபலம் மரணம் - கடைசி வீடியோ

by Editor

சினிமா
சின்னத்திரை பிரபலம் மரணம் - கடைசி வீடியோ

 

சன் மியூசிக் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன். இவர் நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். சித்துபாத் உள்ளிட்ட சீரீயலில் நடித்த ஆனந்த கண்ணன் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


இதனையடுத்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனந்த கண்ணன் மறைவிற்கு ரசிகர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தக் கண்ணன் கடைசியாக தன்னுடைய ரசிகர்களுடன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் நடித்த நாடகம் மற்றும் தொகுப்பாளராக அடுத்த நிகழ்ச்சி குறித்து ஜாலியாக பேசுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிகவும் சோகம் அடைந்துள்ளனர்.

Share via
Advertiment
Ads