Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தெலுங்கு நடிகரின் புதிய படம்.. இணையத்தில் வெளியானதால்  அதிர்ச்சி 

by Editor

சினிமா
தெலுங்கு நடிகரின் புதிய படம்.. இணையத்தில் வெளியானதால்  அதிர்ச்சி 

 

தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியை அடைகின்றன. இந்த நிலையில் அவர் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 'புஷ்பா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கிறிஸ்மஸ் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில் படத்தின் சண்டைக் காட்சிகள் இணையத்தில் பரவி படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவமானது படத்தின் எடிட்டிங் வேலையின் போது திருடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் புலனாய்வுத் துறையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை விரைவில் கைது செய்யவும் காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Share via
Advertiment
Ads