Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அமரன் படத்தை திரையரங்கில் பாா்த்த முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...

by Admin

சினிமா
அமரன் படத்தை திரையரங்கில் பாா்த்த முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...

ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கில் அமரன் திரைப்படத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டவருக்கு அமரன் பட குழுவினர் சார்பாக தனி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. படம் பார்த்து  தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மேஜர் முகுந்த் வரதராஜன் பாத்திரமேற்று நடித்த சிவகார்த்திகேயனிடம்  படம் நன்றாக வந்திருப்பதாக பாராட்டியதோடு பட தயாரிப்பாளரான கமல்ஹாசனிடம் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு படம் நன்றாக வந்திருப்பதாக- கிளைமாக்ஸ் பிடித்த இருப்பதாகவும் சொல்லி  வாழ்த்துக்களை கூறினாா்.

.நண்பர் கலைஞானி கமல்ஹாசன்அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் - திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது! தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர்கே.பி.ராஜ்குமாா், மேஜர் முகுந்த் வரதராஜன் - திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகாா்த்திகேயன்,சாய் பல்லவி, மற்றும் அமரன்  படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் - நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute!.அமரன் படத்தை திரையரங்கில் பாா்த்த முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்,    இது குறித்து தம் எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளாா்.

Share via
Advertiment
Ads