Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா

by Admin

ஆன்மீகம்
ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா

 ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில்  ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் - வெகு விமர்சியாக நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் 

திரளான பக்தர்கள் பங்கேற்பு..

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி திருக்கோயிலில்  ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதுஇதை அடுத்து  நடைபெற்றவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனம் மற்றும்  அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான   திருத்தேரோட்டம் இன்று மிக வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக   காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர்  அம்பாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளிய   திருத் தேரோட்டத்தை அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, தொழிலதிபர் வெங்கடேஷ் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும்  பக்தர்கள், பொதுமக்கள், திரளானோர் கலந்து கொண்டு  தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் அம்மாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்..10 திருவிழாவான நாளை  அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதலும், 11ஆம் நாள் திருவிழா மதியம் அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி  அம்பாளுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சிவும் 12 திருவிழா காலை  அம்பாள் பல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Share via
Advertiment

More Stories

Ads