Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு தேநீர் விருந்து அளித்தார் ஜனாதிபதி...

by Admin

விளையாட்டு
ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு தேநீர் விருந்து அளித்தார் ஜனாதிபதி...

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு தேநீர் விருந்து
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடம் பெற்றது. ஒலிம்பிக் போட்டி முடிந்து இந்திய வீரர், வீராங்கனைகள் நாடு திரும்பியுள்ளனர்.

 இந்நிலையில்  டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்,  வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளித்தார்.  டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது பேசிய குடியரசு தலைவர்,  இந்த அணி ஒலிம்பிக் வரலாற்றில் நாட்டிற்காக அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளதாகவும், அவர்களின் சாதனைகளால் முழு தேசமும் பெருமை கொள்கிறது எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Share via
Advertiment
Ads