Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருவண்ணாமலை மாவட்டம்: லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்.

by Editor

ஆன்மீகம்
திருவண்ணாமலை மாவட்டம்: லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த ஆவணியபுரத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. பிரசித்திப் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு புரட்டாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.அதிகாலை மூலவர் சீனுவாசப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், கோயிலில் உள்ள கொடி மரத்துக்கு பட்டாச்சாரியார்களார் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, அக்டோபர் 8-ஆம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம், இரவு கருட சேவை, 10-ஆம் தேதி தேரோட்டம், 12-ஆம் தேதி காலை தீர்த்தவாரி உள்ளிட்டவை நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Share via
Advertiment

More Stories

Ads