Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் சேதுபதி இந்த நிகழ்வை எப்படி நிகழ்த்த போகிறார்

by Admin

சினிமா
விஜய் சேதுபதி இந்த நிகழ்வை எப்படி நிகழ்த்த போகிறார்

விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு ஆண்டுகளாக கமலஹாசனின் தலைமையில் நிகழ்ந்தது. இந்நிலையில் எட்டாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியதை தொடர்ந்து அந்த இடத்திற்கு தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பிரமோ விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. .இந்த பிரமோ நிகழ்ச்சி அனைவரும் விரும்புகிற மாதிரியாக படப்பிடிப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.. கமலஹாசன் இருந்த இடத்தில் யாரை நியமிக்கலாம் என்று இறுதி வாதத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி யா?  என்ற போட்டியில் விஜய் சேதுபதி வென்று அந்த இடத்தை தனக்கான ஆக்கிக் கொண்டுள்ளார்.. பிக் பாஸ் ஏழு நிகழ்ச்சியிலும் கமலஹாசனின் ஆளுமை பல்வேறு விதங்களில் வெளிப்பட்டது.. அந்த இடத்திற்கு கமலஹாசனை தவிர்த்துவேறு ஒருவர் எந்த மாதிரியாக நிகழ்த்துவார் என்கிற கருத்து வளர்ந்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இப்பொழுது விஜய் சேதுபதி அந்த இடத்தை தனக்குரியதாக்கி உள்ளார்.. ஆனால், அந்த இடத்தை அவர் எப்படி தக்க வைக்கப் போகிறார் என்பது அவருடைய ஆளுமையை பொறுத்து தான் வெளிப்படும். ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் ,சிம்பு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பொழுது கூட மக்களிடம் கமலஹாசனை தவிர்த்து இந்த நிகழ்ச்சி வேறு யாரும் நடத்தி இருந்தாலும் சிறப்பிற்குரியதாக அமையாது என்கிற நிலை தொடர்ந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் விஜய் சேதுபதி இந்த நிகழ்வை எப்படி  நிகழ்த்த போகிறார் என்று  பிக் பாஸ் பார்க்கும்  ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்..

Share via
Advertiment
Ads