Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஜெயம் ரவி தம் திருமண ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டதற்கான அறிக்கை..

by Admin

சினிமா
ஜெயம் ரவி தம் திருமண ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டதற்கான அறிக்கை..

வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம் ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும் திரை அல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரைத்துறை நண்பர்கள் பத்திரிக்கை ஊடகத்துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள் என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன் .எனவே மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்

..நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீனைகளுக்கு பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்து உள்ளேன் .இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டது அல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல் வாழ்விற்காக எடுக்கப்பட்டது. .

இந்த நேரத்தில் எனது தனி உரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனி உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.. இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் .என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே..

நான் என்றும் எப்பொழுதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி..

என்று ஜெயம் ரவி தம் திருமண ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Share via
Advertiment
Ads