Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஏ.ஆர்.ரஹ்மான், தான் சினிமாவில் நடிக்கவுள்ளாரா?

by Editor

சினிமா
ஏ.ஆர்.ரஹ்மான், தான் சினிமாவில் நடிக்கவுள்ளாரா?

 

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தான் சினிமாவில் நடிக்கவுள்ளாரா? இல்லையா? என்கிற கேள்விக்கு தெறி பதில் அளித்துள்ளார்.

"சார், எப்போது உங்களை முதல் படத்தில் நடிகராக எதிர்பார்க்கலாம்?", என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், "ஏன்..? நான் அமைதியாக, எனது வயது முதிர்வு காலத்தில் வாழ்வதை நீங்கள் விரும்பவில்லையா?" என பதில் கூறியுள்ளார்.

அத்துடன் இதே கருத்து பகிர்வில், ஏ.ஆர்.ஆரின் மகன் ஏ.ஆர்.அமீனும் இணைந்தார். அப்போது தந்தையின் பதிலுக்கு அவர் ஒரு கமெண்டை பதிவிட்டுள்ளார். தமது பதிவில், ஏ.ஆர்.அமீன், "நீங்கள் வயதான அப்பா இல்லை. நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.


ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' மற்றும் சியான் விக்ரமின் 'கோப்ரா' ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார். இதேபோல் அண்மையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 'வெந்து தனித்தது காடு' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு பிறகு கவுதம் மேனன் - சிலம்பரசன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணையும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Share via
Advertiment
Ads