Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சீரியலுக்கு நடுவே நடிகை நமீதா

by Editor

சினிமா
சீரியலுக்கு நடுவே நடிகை நமீதா

 

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் நடிகை நமீதா சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை, ராஜாமகள், நீதானே என் பொன்வசந்தம், கோகுலத்தின் சீதை, சத்யா உள்ளிட்ட பல சீரியல்கள் மிகவும் பிரபலம். இந்த வரிசையில் தேவ்யானி, அபிஷேக், திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் பலர் நடித்து வரும் சீரியல் புதுப்புது அர்த்தங்கள்.


இந்த சீரியலில் தேவயானி தன் மகனுக்காக அபிஷேக்கை வெறுக்கிறார். இதனிடையே தேவயானியின் மருமகள் சரியாக நடந்துகொள்கிறார். இந்நிலையில் தான் சாலையில் காரில் வரும் நமீதா, வழியில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயை பார்க்கிறார்.


அதை பார்த்துவிட்டு, யாருக்குமே சமூக பொறுப்பு இல்லை. அனைவரும் இதை கடந்து செல்கின்றனர் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். அப்போது தேவயானியின் மருமகள் அதை எடுத்து மூடுகிறார். நடிகை நமீதா அதை பாராட்டுகிறார்.

Share via
Advertiment
Ads