Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிரகாஷ் ராஜ் - மருத்துவமனையில் அனுமதி

by Editor

சினிமா
பிரகாஷ் ராஜ் - மருத்துவமனையில் அனுமதி

நடிகர் பிரகாஷ் ராஜ். சிறந்த நடிகருக்கான தேசிய விருதுப்போன்ற பிற விருதுகளுக்கு சொந்தக்காரரான இவர் தற்போது தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை கோவளத்தில் தங்கி இருந்தார். அப்போது அவர் வீட்டில் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரகாஷ் ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் கையின் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது என கூறியுள்ளனர். இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதை அவரே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில் "லேசா விழுந்துட்டேன், சின்ன எலும்பு முறிவு, ஹைதராபாத்திற்கு பறக்கிறேன். அங்கே என் நல்ல மருத்துவ நண்பர் குருராவா ரெட்டியின் பாதுகாப்பான கரங்களில் சிகிச்சை பெற்று சீக்கிரமே திரும்பி வருவேன்" என பதிவிட்டுள்ளார்.

Share via
Advertiment
Ads