Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஐபிஎல் 2021: துபாய் சென்ற டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி...

by Admin

விளையாட்டு
ஐபிஎல் 2021: துபாய் சென்ற டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி...

ஐக்கிய அமீரகத்தில் நடக்கவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இன்று  சென்னையிலிருந்து தனி சிறப்பு விமானத்தில் துபாய் சென்றனர்.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடந்த மே மாதம் உச்சக்கட்டத்தை எட்டியதால்,இந்தியாவில் நடந்து கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.இந்போது அந்த போட்டிகளை ஐக்கிய அமீரகத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.அதன்படி வரும் செப்டம்பா் 19 ஆம் தேதியிலிருந்து ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடக்கவுள்ளது.

இதையடுத்து டோனி தலைமையிலான சிஎஸ்கே எனப்படும் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி இன்று சென்னையிலிருந்து டெல்லி வழியாக துபாய் புறப்பட்டு செல்கின்றனா். இவர்கள் அனைவருக்கும் அவர்கள் வந்த பேருந்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சென்னையிலிருந்து  விஸ்தாரா ஏா்லைன்ஸ் தனி  விமானத்தில் டோனி தலைமையில் 25 போ் கொண்ட குழுவினா் துபாய் நாட்டிற்கு புறப்பட்டு  சென்றனர்.

Share via
Advertiment
Ads