Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நகைச்சுவை நடிகர் காலமானார்

by Editor

சினிமா
நகைச்சுவை நடிகர் காலமானார்

வடிவேலு படங்களில் நடித்து வந்த காமெடி நடிகர் வி.காளிதாஸ் உயிரிழந்துள்ளார்.

வடிவேலு நடித்த ஜனனம் படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் காளிதாஸ், வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் நம்மால் மறக்க முடியாதவைகளாக இன்றும் இருக்கின்றன.

நடிகர் காளிதாஸ், பிரபல வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், சீரியல் நடிகராகவும் கூட அறியப்படுபவர். இவரது திடீர் மரணத்தால் அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் வி.காளிதாஸ் இன்று காலமானார். இவருடைய இறுதிச் சடங்க சென்னை போரூரில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்களால் நடத்தப்படுகிறது. காளிதாஸின் உயிரிழப்புக்கு திரையுலகினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Share via
Advertiment
Ads