Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 ‘விக்ரம்’ படத்தில் கமலுடன்  ஆண்ட்ரியா !

by Editor

சினிமா
 ‘விக்ரம்’ படத்தில் கமலுடன்  ஆண்ட்ரியா !

 


நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கமல் உடன் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக கமல் நடிக்கலாம் எனச் செய்திகள் வெளி வருகின்றன.


கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக நடிகை ஆண்ட்ரியா இணைந்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விக்ரம் படத்தில் ஆண்ட்ரியா இணைந்துள்ளதைக் குறிக்கும் வகையில் நடிகை ஆண்ட்ரியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


கோட் ரெட்’ என எழுதியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா. விக்ரம் பட போஸ்டரிலும் இந்த டேக் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை ஆண்ட்ரியாவுக்கு அடுத்தடுத்து அரண்மனை 3, பிசாசு 2 ஆகிய படங்கள் வெளி வர உள்ளன.

Share via
Advertiment
Ads