Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 தோட்டத்தில்உடும்பு:  வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த உஷா ராஜேந்தர்

by Editor

சினிமா
 தோட்டத்தில்உடும்பு:  வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த உஷா ராஜேந்தர்


கர்ப்பம் தரித்த உடும்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்ததார் தயாரிப்பாளரும், நடிகர் டி.ஆர்.சிலம்பரசனின் தாயாருமான உஷா ராஜேந்தர்.


 டி.ராஜேந்தரின் டி.ஆர்.கார்டன் சென்னை மதுரவாயல் அருகே உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த கார்டனில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஒரு உடும்பு அந்த இடத்தில் பதுங்கி இருப்பதை கண்ட பணியாளர்கள், உஷா ராஜேந்தரிடம் உடனே தெரிவித்தனர். அவர் விரைந்து வந்ததார். உடும்பு கர்ப்பமாக இருப்பதை பார்த்தார்.


உடனே மதுரவாயல் காவல் நிலையத்தை அணுகி உடும்பு இருப்பதைத் தெரிவித்தார். வேளச்சேரியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு  தெரிவிக்கப்பட்டது.  பாதுகாப்பாக அந்த உடும்பை எடுத்து சென்றனர்.


உடும்பின் நிலை கண்டு ‘தாய்மை’ குணத்துடன் உடனே தகவல் தெரிவித்த உஷா ராஜேந்தருக்கு காவல் துறையினரும், வனவிலங்கு அதிகாரிகளும்  பாராட்டினார்கள்.

Share via
Advertiment
Ads