Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வைகாசி விசாகத் திருவிழா

by Admin

ஆன்மீகம்
 வைகாசி விசாகத் திருவிழா

முருகப்பெருமானுக்கு உகந்த நாளான வைகாசி விசாகத் திருவிழா நாடெங்கிலுமுள்ள முருகன் ஆலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அறுபடை வீடுகளில் ஒன்றான 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (மே 22) வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் முருகனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பலர் குழுக்களாக பாதயாத்திரை மேற்கொண்டு திருந்செந்தூரை அடைந்துள்ளனர். அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
காலை 10 மணிக்கு உச்சிகால அபிபேஷம், தீபாராதனை நடைபெறவுள்ளதால், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து வழிபாடு செய்கின்றனர். கோவில் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்திலுள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் விசாகத்திருவிழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் சாமிதரிசனத்திற்கும்,வேண்டுதல்களை நிறைவேற்றவும் திரண்டு சென்றவண்ணம் உள்ளனர்.

Share via
Advertiment

More Stories

Ads