Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு நடைபெற்ற 3ம் ஆண்டு கச்சை கட்டும் விழா -

by Admin

விளையாட்டு
சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு  நடைபெற்ற 3ம் ஆண்டு கச்சை கட்டும் விழா -

 கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வைத்துஇன்டர் நேஷனல் சிலம்பம் ஆட்ட சாலை சார்பில் மாவட்ட சிலம்பம் வீரர் வீராங்கனைகளுக்கு 3ம்ஆண்டு கச்சை கட்டும் விழா சிலம்பாட்ட பயிற்சியாளர் சோலை நாராயணசாமி தலைமையில் தேசிய நடுவர் பாண்டியன், பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான பெல்ட்கள் தேர்வு செய்தார். இவ்விழாவில் சிறப்பு  அழைப்பாளராக காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி செயலாளர் ரத்னராஜ் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு சிலம்பாட்டத்தில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு கச்சையை கட்டி விட்டு தனது சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  நிகழ்ச்சியில் சிலம்பம் ஆட்ட பயிற்சியாளர்கள் வெற்றி, மகாராஜன், கணபதி, உமாசங்கரி, மதன், பிரசாத், வேல்ராஜ்,மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Share via
Advertiment
Ads