Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி ஆலயம் குரு பெயர்ச்சி விழா

by Admin

ஆன்மீகம்
 அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி ஆலயம் குரு பெயர்ச்சி விழா

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள புளியரையில் அமைந்துள்ளது அருள்மிகு சிவகாமி அம்பாள், சமேத சதாசிவமூர்த்தி, அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி ஆலயம். இந்த ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா வருகின்ற ஒன்றாம் தேதி மதியம் 3 57 மணிக்கு வியாழ பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசிக்க இருப்பதால் அன்று தட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற உள்ளன. இதன் தொடர்ச்சியாக 29ஆம் தேதி திங்கள் கிழமை காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் அபிஷேகம் தீபாராதனையோடு திருவிழா துவங்கியது.  லட்சார்ச்சனை துவங்கியது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு லட்ச்சார்ச்சனைக்கு உரிய கட்டடங்கள் செலுத்தி அதில் கலந்து கொண்டனர்.

 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக  ஹோமம், சுதர்சன ஹோமம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை, மாலை 5 மணிக்கு சிறப்பு மேளம், மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை, உள்ளிட்டவைகள்  நடைபெற உள்ளன.
 ஒன்றாம் தேதி புதன்கிழமை காலை நாம சங்கீர்த்தனம், 11 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை. பூஜைகளும் பகல் 11:30 மணிக்கு ருத்ர ஏகாதேசி ஆகியவை நடைபெறுகின்றன, இதன்  தொடர்ச்சியாக மாலை 3.57 மணிக்கு  மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு  குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றன, இதற்கான ஏற்பாடுகளை இணைக்கப்பட்ட இணைக்கப்படாத திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்து வருகின்றனர்.மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Share via
Advertiment

More Stories

Ads