Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மதுரை சித்திரை திருவிழா- இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது

by Admin

ஆன்மீகம்
மதுரை சித்திரை திருவிழா- இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது

மதுரையின்  முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. இந்த ஆண்டு கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவிழா வாஸ்து சாந்தியுடன் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் ஏப்ரல் 19  நடைபெற்றது. .  20 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும்,  இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெற்றது  ஏப். 22 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.  இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

இதையடுத்து,  சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.  அதிகாலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள்ளாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளார்.  வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக கள்ளழகர் ஏப்ரல் 21 ஆம் தேதி மாலை 6:25 மணி அளவில் அழகர் மலையிலிருந்து புறப்படுகிறார்.

ஏப்ரல் 24 ஆம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும்,  அதனைதொடர்ந்து விடிய விடிய தசாவதார நிகழ்வும் நடைபெற உள்ளது.  பின்னர், சித்திரைத் திருவிழாக்கள் நிறைவு பெறுவதை அடுத்து ஏப்ரல் 27ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு திரும்புகிறார்.

Share via
Advertiment

More Stories

Ads