Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிம்பு நடிக்கும்  ’வெந்து தணிந்தது காடு’பர்ஸ்ட்லுக் போஸ்டர் 

by Editor

சினிமா
சிம்பு நடிக்கும்  ’வெந்து தணிந்தது காடு’பர்ஸ்ட்லுக் போஸ்டர் 


கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் ’வெந்து தணிந்தது காடு’ என்றும் இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.


மேலும்,  இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் தற்போது டுவிட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாகி வருகிறத. இது குறித்து ரசிகர்களுக்கிடையே ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் கவுதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாயகியாக நடிக்கும் நடிகை தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
சிம்பு அடுத்ததாக ,‘வெந்து தணிந்தது காடு’ படத்தை முடித்துவிட்டு ‘பத்து தல’ என்ற நடிக்கவிருக்கிறார். அதனை அடுத்து மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share via
Advertiment
Ads