Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஒலிம்பிக் மல்யுத்தம்:  அரையிறுதியில் இந்திய வீரர் தோல்வி

by Editor

விளையாட்டு
 ஒலிம்பிக் மல்யுத்தம்:  அரையிறுதியில் இந்திய வீரர் தோல்வி



டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தோல்வி அடைந்தார்.


ஜப்பான் தலைநகரில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கு மற்றொரு பதக்க வாய்ப்பை பெற்றுத் தந்தார் பஜ்ரங் புனியா. காலிறுதி சுற்றில் ஈரான் வீரர் மோர்டேசா காசாவை எதிர்த்து களமிறங்கிய பஜ்ரங் புனியா அவரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அஜர்பைஜான் மல்யுத்த வீரர் ஹாஜி அலியேவுக்கு டஃப் பைட் கொடுத்த பஜ்ரங் புனியா 12-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். எனினும், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் நாளை அவர் விளையாட உள்ளார்.


டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீர, வீராங்கனைகள் அபாரமாக விளையாடி இதுவரை இந்தியாவுக்காக 5 பதக்கங்களை பெற்றுக் தந்துள்ளனர் .

Share via
Advertiment
Ads