Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விசில் போடு - விஜய் பாடல் போஸ்டர் வெளியீடு

by Staff

சினிமா
விசில் போடு - விஜய் பாடல் போஸ்டர் வெளியீடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (GOAT) படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் இன்று (ஏப்ரல் 14) மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விசில் போடு என்ற வரிகளுடன் உருவாகியுள்ள இந்த பாடல் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads