Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது...

by Admin

ஆன்மீகம்
 கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது...

தூத்துக்குடி மாவட்ட கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில்  பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும்.

இந்தாண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டன

ர். விழா நாட்களில் தினமும் மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய சிகரமான கருதப்படும் திருத்தேரோட்டம் வரும் 23 ம் தேதி  நடக்கிறது 24 ம் தேதி தீர்த்தவாரி, தபசு நிகழ்ச்சியும், 25 ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது

Share via
Advertiment

More Stories

Ads