Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் லவ்லினா...

by Admin

விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் லவ்லினா...

 



டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துச்சண்டை போட்டியிக் இந்தியாவின் லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

  டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா. அரையிறுதியில் 0-5 என, துருக்கி வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.ஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான குத்துச்சண்டை வெல்டர் வெயிட் எடைப் பிரிவு (69 கிலோ) அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா, நடப்பு உலக சாம்பியன் துருக்கியின் புசனெஸ் சர்மெனெலி மோதினர்.
 
இதில் லவ்லினா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

 இது, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கமானது. ஏற்கனவே பளுதுாக்குதலில் மீராபாய் சானு (வெள்ளி), பாட்மின்டனில் சிந்து (வெண்கலம்) பதக்கம் வென்றிருந்தனர்.

Share via
Advertiment
Ads