Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சாதனை படைக்குமா இந்திய மகளிர் ஹாக்கி அணி..? அரையிறுதியில் அர்ஜெண்டினாவுடன் மோதல்..

by Admin

விளையாட்டு
சாதனை படைக்குமா இந்திய மகளிர் ஹாக்கி அணி..? அரையிறுதியில் அர்ஜெண்டினாவுடன் மோதல்..



டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா  அர்ஜெண்டினா  அணிகள் இன்று மோத உள்ளன.
 
ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் அணி லீக் சுற்றில் முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. அதனை தொடந்து வீறு கொண்டு எழுந்த இந்திய அணி கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
 
 இன்று நடக்கும் மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி அர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிப் பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யுமா இந்திய மகளிர் அணி என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

Share via
Advertiment
Ads