Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வெண்கலம் வென்ற பி வி சிந்துவிற்கு தில்லியில் பாராட்டு விழா பதிவு செய்த நாள்

by Editor

விளையாட்டு
வெண்கலம் வென்ற பி வி சிந்துவிற்கு தில்லியில் பாராட்டு விழா பதிவு செய்த நாள்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்று, ஒலிம்பிக் போட்டியில் தனது 2-ஆவது பதக்கத்தைப் பெற்றுள்ளார் பி.வி. சிந்து.

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி. சிந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்பயிற்சியாளர் பார்க் டே-சாங்- உடன் வந்திருந்த சிந்துவுக்கு தில்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பி வி சிந்து மற்றும் பயிற்சியாளர் பார்க் டே-சாங் ஆகியோருக்கு மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டு தெரிவித்தார்.மேலும் பயிற்சியாளர் பார்க் டே-சாங்-க்கு பொன்னாடையை அணிவித்தார் அமைச்சர் அனுராக் தாக்கூர்

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் டாக்கூர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் பாராட்டு விழாவில் பங்கேற்றனர்

Share via
Advertiment
Ads