Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கோமாவில் நடிகர் வேணு அரவிந்த்

by Editor

சினிமா
கோமாவில் நடிகர் வேணு அரவிந்த்

 

தி ரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் வேணு அரவிந்த். இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். மேலும் வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் கட்டி வந்து அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும், கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

Share via
Advertiment
Ads