Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சூர்யாவின் கங்குவா படம் : 1000 ஆண்டுகள் பழசு

by Staff

சினிமா
சூர்யாவின் கங்குவா படம் : 1000 ஆண்டுகள் பழசு

சிறுத்தை சிவா இயக்கத்தில் புது விதமான தோற்றத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா. இதன் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் படம் குறித்து தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகினாலும், தற்போது இந்தப்படத்தில் பணியாற்றி வரும் மதன் கார்க்கி சுவாரசிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, இந்த படத்தில் வரும் பீரியட் பகுதி ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இதற்காக புதிதாக நிலம், மாந்தர்கள், வட்டார வழக்கு என பல விஷயங்களை செய்துள்ளோம். மிகமுக்கியமாக புதிதாக ஒரு கடவுளையும் உருவாக்கி உள்ளோம்" என்று கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share via
Advertiment
Ads