Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஷால் படப்பிடிப்பில் வேன் கவிழ்ந்து விபத்து

by Staff

சினிமா
விஷால் படப்பிடிப்பில் வேன் கவிழ்ந்து விபத்து

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய திரைபடத்தின் படப்பிடிப்பு காரைக்குடி பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து மின் விளக்குகள், ஜெனரேட்டர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று காரைக்குடி நோக்கி சென்றது. இந்த வேன் தஞ்சாவூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share via
Advertiment
Ads