Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கார்த்தியின் 25- வது படமான ஜப்பான் ட்ரைலர் வெளியீடு.

by Admin

சினிமா
கார்த்தியின் 25- வது படமான ஜப்பான் ட்ரைலர் வெளியீடு.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்பு நடிகர் கார்த்திக்கை அதிகம் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் படம் ஜப்பான். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் வெளியிடப்பட்டது. இது கார்த்திக்கின் 25 ஆவது படம் என்பதாலும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது .. தன் தாயை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக திருடனாக மாறி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து கேரளாவில் தலைமறைவாக இருக்கும் கார்த்திக் என்ன செய்யப் போகிறார் என்கிற ஆவலுடன் படத்தினுடைய  ட்ரெய்லர் இருப்பதால்  இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .அதோடு இயக்குனராக இருப்பவர் ராஜ் முருகன் என்பதாலும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ரசிகர்களிடையே.. ,இப்படத்தில் அனு இம்மானுவேல், கார்த்திக்கின் சோடியாக நடித்துள்ளார் .இவர்களுடன் கே. எஸ். ரகுமான், சுனில், விஜய் மில்டன் ஆகியோருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டு இருப்பதாலும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.. ட்ரெய்லர் வெளியீட்டில்கார்த்திக்கின் அண்ணனும் நடிகருமான சூர்யாவும் இன்றைக்கு அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் விழாவுக்கு வந்திருந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூ ட்டி இருக்கிறது..

Share via
Advertiment
Ads