Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

லியோ படத்தின் டிரைலர்

by Admin

சினிமா
லியோ படத்தின் டிரைலர்

விஜய் நடித்து வெளிவர இருக்கும் லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆடியோ நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், காவல்துறை அனுமதி வழங்காததை அடுத்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ரசிகர்களுடைய எதிர்பார்ப்புக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அடுத்து பட குழு ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கோடு செகண்ட் சிங்களை வெளியிட்டது. இந்நிலையில் ட்ரைலரை வெளியிட்டு படம் வருவதற்கு முன்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி- கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து ட்ரைலரை வெளியிடுவதற்கான முயற்சி எடுத்து வருகிறார்கள். காவல்துறை அனுமதி கொடுத்தால் லியோ படத்தின் டிரைலர் நாளை பொதுவெளியில் வெளியாகும்..

Share via
Advertiment
Ads