Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டேபிள் டென்னிஸ்: சரத் கமல் 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

by Editor

விளையாட்டு
டேபிள் டென்னிஸ்: சரத் கமல் 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் சரத் கமல் போர்ச்சுக்கல் வீரர் தியாகோ அபோலோனியாவை எதிர்கொண்டார். கடும் சவால் அளித்த போர்ச்சுக்கல் வீரரை 4-2 என்ற செட் கணக்கில் சரத் கமல் வென்று 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதையடுத்து சரத் கமல் 3ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த மா லாங்கை எதிர்கொள்கிறார். முன்னதாக டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல், மானிகா பத்ரா ஜோடி தோல்வி அடைந்தது 

Share via
Advertiment
Ads