Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி இந்திய வீரர்கள் அரவிந்த் சிங், அர்ஜுன் லால்  அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர் 

by Editor

விளையாட்டு
ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி இந்திய வீரர்கள் அரவிந்த் சிங், அர்ஜுன் லால்  அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர் 


டோக்கி ஒலிம்பிக்’ துடுப்பு படகு போட்டியின் இரட்டையர்களுக்கான பிரிவில் இந்திய வீரர்கள் அரவிந்த் சிங் மற்றும் அர்ஜுன் லால் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஒலிம்பிக் 2020 தொடரில் முதல் கட்டமாக துடுப்பு படகு போட்டியின் பல்வேறு பிரிவு ஆட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக தகுதி போட்டிகள், முதல் சுற்று போட்டிகள் இதில் நடைபெற்றது.
 இரட்டையர்களுக்கான துடுப்பு படகு போட்டி தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக அரவிந்த் சிங் மற்றும் அர்ஜுன் லால் ஆகியோர் கலந்து கொண்டனர். இரட்டையர் பிரிவில் இவர்கள் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார்கள். தகுதி சுற்று தகுதி சுற்று போட்டியில் இவர்கள் இருவரும் ஐந்தாவது இடத்தை பிடித்தனர். 6:40.33 நிமிடத்தில் தங்கள் சுற்றுகளை இவர்கள் முடித்தனர். இதையடுத்து  இரண்டாம் கட்ட சுற்றான இறுதி தகுதி சுற்றுக்கு இருவரும் தகுதி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து  போட்டியிலும் சிறப்பாக ஆடிய இரண்டு பேரும் கால் இறுதி சுற்றுக்கு தேர்வாகினர். பின்னர் நடந்த கால் இறுதி போட்டியில் 6.51.36 நிமிடத்தில் தங்கள் சுற்றுகளை அரவிந்த் மற்றும் அர்ஜுன் நிறைவு செய்தனர். இதன் மூலம் மூன்றாம் இடத்திற்கு இந்திய அணி முன்னேறியது. இதன் காரணமாக தற்போது அரையிறுதி சுற்று போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

Share via
Advertiment
Ads