Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஒலிம்பிக் பாட்மிண்டன்: பி.வி. சிந்து வெற்றி

by Editor

விளையாட்டு
ஒலிம்பிக் பாட்மிண்டன்:  பி.வி. சிந்து வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து முதல் சுற்றில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து இஸ்ரேலின் பொலிகார்போவாவை எதிர்கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி. சிந்து 21-7 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய சிந்து பொலிகார்போவாவை திணறடித்தார்.

இதன்மூலம், 28 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற போட்டியில் 21-7, 21-10 என்ற நேர் செட் கணக்கில் பி.வி. சிந்து வெற்றி பெற்றார்.

Share via
Advertiment
Ads