Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

by Editor

சினிமா
69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விஜய்சேதுபதி, நல்லாண்டி, யோகி பாபு நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'கடைசி விவசாயி' திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவில் 'கடைசி விவசாயி' படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல் "கருவறை" என்ற ஆவணப் படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், இயக்குநர் லெனின் இயக்கிய 'சிற்பிகளின் சிற்பங்கள்' என்ற ஆவணப் படத்திற்கு சிறந்த கல்வியியல் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'ராகெட்ரி: நம்பி எபெக்'ட் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி பாடகியாக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக எம்.எம்.கீரவாணி மற்றும் 'புஷ்பா' படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் பெருகின்றனர். இந்த விருதை இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர். அதே போல் சிறந்த சண்டைப்பயிற்சிக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் விருது பெறுகிறது. அதே போல் சிறந்த நடனப் பயிற்சிக்கான விருதையும் 'ஆர்ஆர்ஆர்' படம் பெறுகிறது. இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே ஆஸ்கர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.


'புஷ்பா' படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 69வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அனுசுயா பரத்வாஜ், ராவ் ரமேஷ், அஜய் கோஷ், தனஞ்ஜெயா, ஜெகதீஷ் பிரதாப் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிசில் ரூ.375 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

சிறந்த தமிழ் திரைப்படம் - கடைசி விவசாயி (2021)

சிறந்த மலையாளம் திரைப்படம் - ஹோம் (2021)

சிறந்த கன்னடம் திரைப்படம் - 777 சார்லி (2022)

சிறந்த தெலுங்கு திரைப்படம் - உப்பெனா (2021)

Share via
Advertiment
Ads