Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மாவீரன் ஓடிடியில் வெளியாகிறது

by Staff

சினிமா
மாவீரன் ஓடிடியில் வெளியாகிறது

'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இந்நிலையில் ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது என தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், இப்படம் 11 நாளில் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads