Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தோனியின் சினிமா தயாரிப்பு கம்பெனியின் எல்.ஜி.எம் படம் தமிழ் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை

by Admin

சினிமா
தோனியின்  சினிமா தயாரிப்பு கம்பெனியின் எல்.ஜி.எம் படம் தமிழ் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை

தோனியின் ,தோனி ப்ரொடக்ஷன் சினிமா தயாரிப்பு கம்பெனியின் வழியாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த எல்.ஜி.எம் படம் தமிழ் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தோனியை கிரிக்கெட் வீரராக, கேப்டனாக, விக்கெட் கீப்பராக பார்த்து ரசித்த தமிழக ரசிகர்கள் அவரை தலை என்றும் தலைவர் என்றும் கொண்டாடுகிறனர். தமிழ்நாடு அவர் தயாரித்த படத்தை அங்கீகரிக்கவில்லை. அதற்கு காரணம் படத்தினுடைய கதை வலுவாக இல்லாததும் காட்சி அமைப்பும் இயக்கமும் கை கொடுக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரம் சொல்கிறது. தோனி ,தமிழ்நாட்டில் செல்ல புள்ளை என்று வர்ணிக்கப்படுவதால், அவர் தமிழ் படங்களை தயாரிப்பதோடு மட்டுமில்லாமல் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை கொண்துளிடிருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கிரிக்கெட்டில் வெற்றி பெற்றவர் தமிழ் திரை உலகில் கதாநாயகனாகவெற்றிபெறுவாரா..? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அவர் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக நடிப்பார் என்பது வெறும் செய்தியாக இருந்தால் நன்றாக இருக்கும். கிரிக்கெட்டில் ஜாம்பவானாக பார்த்த டோனி கிரிக்கெட்டில் மட்டுமே இருப்பது தான் சாலச் சிறந்தது. அந்த இமேஜ் உடைபடாமல் இருக்கட்டும்.

Share via
Advertiment
Ads