Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தமிழ் திரை உலகின் முன்னணி பின்னணி பாடகா் திருச்சி லோகநாதன் பிறந்து இன்றோடு நூறாவது ஆண்டு ஆகிறது,.

by Admin

சினிமா
 தமிழ் திரை உலகின் முன்னணி பின்னணி பாடகா் திருச்சி லோகநாதன் பிறந்து இன்றோடு நூறாவது ஆண்டு ஆகிறது,.

திருச்சி லோகநாதன் தமிழ் திரை உலகின் முன்னணி பின்னணி பாடகராகதிகழ்ந்தவர். அவர் பாடிய பாடல்கள் இன்றும் நெஞ்சை வருடிக் கொண்டிருக்கும் தேவகானம். வாராய் நீ வாராய் போகுமிடமெல்லாம், ஆசையே அலை போலே, செந்தமிழ் தேன்மொழியாள், வெண்ணிலா குடை பிடிக்க வெள்ளி மீன் ,ஆடை கட்டி வந்த நிலவோ, கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம், என்று தனியும் இந்த சுதந்திர தாகம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி நம்மளுடைய இதயத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் திருச்சி லோகநாதன் பிறந்து இன்றோடு நூறாவது ஆண்டு ஆகிறது,. ஜூலை 24 அவருடைய பிறந்தநாள். பிரபல பின்னணி இசை பாடகர்களான டி எல் மகாராஜன், தீபன் சக்கரவர்த்தி இவருடைய புதல்வர்கள். முன்னாள் பிரபல நடிகை ராஜகாந்தம்மகள் ராஜலட்சுமி ,இவர் துணைவியாா் ஆவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads